மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு
X

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு பூசாரி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அடுத்த பூசாரி வீதியில் உள்ள சிஐடியு கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10வது நகர மாநாடு மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி தலைமையில் நடைபெற்றது‌. இதில் மக்களின் சொத்துக்களை தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்காதே,தொழிலாளர் நலச்சட்டங்களை தொழிலாளர்களின் விரோத சட்டங்களாக மாற்றாதே, ஈரோடு அரசு பொது மருத்துவமனைக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் கருவிகளை வழங்க வேண்டும். தேவைக்கேற்க மருத்துவர்களையும், பணியாளர்களையும், செவிலியர்களையும் பணியில் அமர்த்திட வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடித்திட வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!