ஈரோடு மாநகராட்சியில் 100 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாநகராட்சியில் 100 வேட்பாளர்கள்  வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் 100 வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக 6 இடங்களில் பிரித்து வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிட வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வரை 26பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று மட்டும் 100 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் நான்கு நகராட்சியிலும் சேர்த்து 164 வேட்புமனுக்களும் ,42 பேரூராட்சிகளில் 1086 வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!