ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரயில் மூலமாக கர்நாடக மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் இன்று ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காவல் ஆய்வாளர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் ஈரோடு வழியாக மைசூர் செல்லும் ரயிலின் சோதனை செய்தனர். சோதனை செய்ததில் பயணிகள் அமரும் இருக்கையின் அடியில் கேட்பாரற்று 35 கிலோ எடையுள்ள 3 சாக்கு பைகள் கிடந்தது. அதனை கைபற்றி காவல்துறையினர் சோதனை செய்தனர் அதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் ரயில் மூலமாக கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படையினர் அதனை கைபற்றினர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்