ஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம்சுப்பிரமணியம் போட்டியின்றி தேர்வு
ஈரோடு மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வான நாகரத்தினம் சுப்பிரமணியத்துக்கு சிவகுமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலராக பதவியேற்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சியைப் பொருத்தவரையில் திமுக மேயர் வேட்பாளராக நாகரத்தினம்சுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று ஈரோடு மாநகர ஆணையர் சிவகுமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஈரோடு மேயராக நாகரத்தினம்சுப்பிரமணியம் ஒருமனதாக தேர்வானார். இதையடுத்து அவருக்கு ஈரோடு மாநகர ஆணையர் சிவகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து மேயருக்கான அங்கியையும் வழங்கினார். மேயருக்கான அங்கியணிந்து இருக்கையில் அமர்ந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu