ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு: கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

முதல்வர் ஸ்டாலின்

கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50,000‌ நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுக்காவிலும் இதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று வரை 699 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றும் இறந்துள்ளனர். இவ்வாறாக, விண்ணப்பித்தவர்கள் அந்தந்த வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் விசாரித்து தகுதிப்பட்டியலை மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி ரூ. 50,000 பெற்றுத் தரப்படும். விண்ணப்பப்படிவத்துடன் ஆதார் அட்டை, சிகிச்சையின்போது வழங்கப்பட்ட ஆவணங்கள், பரிசோதனை முடிவுகள், அரசு வழங்கிய இறப்புச் சான்று போன்றவற்றின் நகல்களை இணைக்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!