ஈரோடு: அண்ணா பதக்கம் வேண்டி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு: அண்ணா பதக்கம் வேண்டி விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

அண்ணா பதக்கம் வேண்டி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

தமிழக அரசால் 2022-ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது. உயிர்காத்தல் போன்ற வீரமிக்க செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது 6 பதக்கங்கள் உள்ளடக்கியதாகும். 3 பதக்கங்கள் பொதுமக்களின் சேவையை பாராட்டியும், 3 பதக்கங்கள் அரசு ஊழியர்கள் மற்றும் சீருடை பணியாளர்களுக்காகவும் வழங்கப்பட உள்ளது. ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்படிவவத்தினை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். இதே போல் கபீர் புரஸ்கார் விருது வேண்டியும் இன்றைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறி உள்ளார்.

Tags

Next Story
AI மூலம் புகைப்படங்களில் அதிரடியான மாற்றங்கள் செய்யும் Editing AI Tools!