ஈரோடு இடைத்தேர்தல்: குறும்படங்களை திரையிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு
ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிப்பரப்பப்பட்டு வருவதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்காக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023-ஐ முன்னிட்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்களை மின்னணு வீடியோ வாகனம் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒளிபரப்பப்ட்டு வருகிறது.
அதன்படி, "வாக்களிப்பது ஜனநாய கடமை", "வாக்களிப்போம், வாக்களிப்போம்", "பாரதத்தின் பெருமை ஒட்டுரிமை" உள்ளிட்ட 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி, 02.02.2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் - 21 மற்றும் வார்டு எண் - 22 வள்ளியம்மை வீதி, குமரன் வீதி, தங்கவேல் வீதி, காந்திஜீ வீதி, சக்திரோடு மெயின் ஆகிய பகுதிகளிலும், 03.02.2023 வார்டு எண் 23 அண்ணா வீதி, கலைவாணர் தெரு, கண்ணதாசன் தெரு, ராஜாஜி தெரு, ஏ.பி.டி ரோடு ஆகிய பகுதிகளிலும், 04.02.2023 அன்று வார்டு எண் - 24, 25 கிருஷ்ணம்பாளையம் வீதி, புது ஸ்டேட் பேங்க் காலனி, பம்பிங் ஸ்டேசன் ரோடு, ஸ்டேட் பேங்க் காலனி, ராமமூர்த்தி நகர், 06.02.2023 அன்று வார்டு எண் 26,27 கணபதிபுரம் பச்சியம்மன் கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, திருநகர் காலனி, கே.என்.கே.ரோடு ஆகிய பகுதிகளிலும் திரையிடப்படுகிறது.
தொடர்ந்து, 07.02.2023 அன்று வார்டு எண் 28 நகராட்சி குடியிருப்பு, அண்ணாமலை லேஅவுட், சின்னமுத்து மெயின் வீதி, முனிசிபல் காலனி, திரு.வி.கா ரோடு ஆகிய பகுதிகளிலும், 08.02.2023 அன்று வார்டு எண் 29 சம்பத் நகர் ஆர்.பி.டைப், ஆர்.சி.டைப், ஆர்.ஏ.டைப், பாப்பாத்திக்காடு ஆகிய பகுதிகளிலும், 09.02.2023 அன்று வார்டு எண் 34 பூசாரி சென்னிமலை வீதி, ஈ.சி.எம்.லேஅவுட், காந்தி நகர் காலனி, கந்தப்பவீதி, குமாரசாமி வீதி ஆகிய பகுதிகளிலும், 10.02.2023 அன்று வார்டு எண் 34,35 முத்துசாமி சந்து, பழனியப்பா வீதி, அகில்மேடு மெயின் வீதி, வடக்கு, வடக்கு ஈஸ்வரன் கோவில் வீதி, தில்லை நகர் ஆகிய பகுதிகளிலும், 11.02.2023 அன்று வார்டு எண் 36 சொக்கநாதர் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, ஈ.வி.கே.சம்பத் சாலை, கொங்காலம்மன் கோவில் வீதி, சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளிலும், 13.02.2023 அன்று வார்டு எண் 37,38 மில் வீதி, இராஜாஜிபுரம் கிழக்கு சின்னமாரியம்மன் கோயில் வீதி, வடக்கு சின்னமாரியம்மன் கோயில் வீதி, ராயல் லே அவுட் ஆகிய பகுதிளிலும், 14.02.2023 அன்று வார்டு எண் 39, 40 சேக்கிழார் வீதி, மரப்பாலம் ரோடு, காவேரி ரோடு, கோட்டையார் வீதி, ஓங்காளியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளிலும் திரையிடப்படவுள்ளது.
வரும் 15.02.2023 அன்று வார்டு எண் 41,42 மாரிமுத்து வீதி, வி.வி.சீ.ஆர் லே அவுட், கச்சேரி வீதி, அக்ரஹார வீதி, குப்பிபாலம் ரோடு ஆகிய பகுதிளிலும், 16.02.2023 அன்று வார்டு எண் 43 நேதாஜி வீதி, அருள்மொழி வீதி, ஜீவானந்தம் ரோடு, கம்பர் வீதி, குந்தவை வீதி ஆகிய பகுதிளிலும், 17.02.2023 அன்று வார்டு எண் 43,44 நேதாஜீ வீதி, புது அக்ரஹார வீதி, வளையக்கார வீதி, ஜீவானந்தம் ரோடு, நடுவீதி ஆகிய பகுதிளிலும், 18.02.2023 அன்று வார்டு எண் 44,45 பூந்துறை ரோடு, சிதம்பரம் காலனி, நல்லப்பா வீதி, பெரியார் நகர் 1, பெரியார் நகர் 2 ஆகிய பகுதிளிலும், 20.02.2023 அன்று வார்டு எண் 45,46 பெரியார் நகர் 5, பெரியார் நகர் குடிசை மாற்று வாரியம், ராஜாக்காடு, காரமடை, வேலா வீதி ஆகிய பகுதிளிலும், 21.02.2023 அன்று வார்டு எண் 46 கருப்பண்ணசாமி கோவில் வீதி, மாரப்பன் வீதி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, பூசாரி வீதி, எஸ்.கே.சி. ரோடு ஆகிய பகுதிளிலும் திரைப்படப்படுகிறது.
மேலும், 22.02.2023 அன்று வார்டு எண் 51 அண்ணா நகர் மெயின், அசோகபுரி குடிசைகள், கிராமடை, பெரியார் நகர், சாந்தான்கருக்கு ஆகிய பகுதிளிலும், 23.02.2023 அன்று வார்டு எண் 51,52 ஈ.எம்.மெயின் வீதி, மணல்மேடு வீதி, பாலசுப்பராயலு வீதி, ஈ.வி.என் ரோடு, ஜீவானந்தம் ரோடு ஆகிய பகுதிளிலும், 24.02.2023 அன்று வார்டு எண் 52 பட்டக்காரர் வீதி, தங்கபெருமாள் வீதி, ஈ.வி.ஆர்.வீதி, இரயில்வே ஸ்டேசன் ரோடு, ராஜாஜி வீதி ஆகிய பகுதிளிலும், 25.02.2023 அன்று வார்டு எண் 52, 53 வெங்கட்ட வீதி, எல்.ஜி.ஜி.எஸ் காலனி, ரயில்வே காலனிரோடு, ஆலமரத்து வீதி, கரூர் ரோடு ஆகிய பகுதிளிலும் திரையிட்டப்பவுள்ளது. ஆகவே, இப்பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் வாக்களார் விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டு பயனடைவதோடு, வருகின்ற 27.02.2023 அன்று அனைவரும் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu