ஜூலை 29-ல் தொடங்குகிறது ஈரோடு புத்தகத் திருவிழா-2022

ஜூலை 29-ல் தொடங்குகிறது ஈரோடு புத்தகத் திருவிழா-2022
X

ஈரோடு புத்தகத் திருவிழா-2022.

ஈரோடு புத்தகத் திருவிழா வரும் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை 12 நாட்கள் ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை, நெய்வேலி புத்தகத் திருவிழாவுக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது ஈரோடு புத்தகத் திருவிழா. சென்னைக்கு அடுத்தபடியாக, ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கென்றே ஏராளமான புதிய நூல்கள் வெளியிடப்படும் வரலாறு உண்டு.

தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும், ஈரோடு புத்தகத் திருவிழாவுக்காக வாசகர்கள் வரிசை கட்டுவார்கள். 'மக்கள் சிந்தனைப் பேரவை' என்னும் அமைப்பு சார்பில் கடந்த 15 வருடங்களாக 'ஈரோடு புத்தகத் திருவிழா' சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த 16வது ஈரோடு புத்தகத் திருவிழா-2022 ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில், வரும் ஜூலை 29ம் ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 230-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்