வரும் 5ம் தேதி முதல் ஈரோடு புத்தகத் திருவிழா: நிகழ்ச்சி நிரல் வெளியீடு

ஈரோடு புத்தகத் திருவிழா-2022.
Erode Book Festival-மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில், 18வது ஈரோடு புத்தக திருவிழா சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் வரும் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. புத்தக திருவிழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வரும் 5ம் தேதி மாலை 5 மணிக்கு துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, தினமும் மாலை 6மணிக்கு சிந்தனை அரங்க நிகழ்வுகள் நடக்க உள்ளது.
இதன்படி, 6ம் தேதி மாலை கலையும் இலக்கியமும், மக்களின் மன மகிழ்ச்சிக்காகவா? மறுமலர்ச்சிக்காகவா? என்ற தலைப்பில் பேராசி ரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன் றம் நடைபெற உள்ளது. 7ம் தேதி மாலை 'ஊசியில் ஒரு கிழிசல்' என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் காதர், 'கேள்விக்கென்ன பதில்' என்ற தலைப்பில் முனைவர் சங்கர சரவணன் ஆகியோர் பேசுகின்றனர். 8ம் தேதி மாலை அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் பங்கேற்று வழங்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து 'யுரேகா, யுரேகா' என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். 9ம் தேதி மாலை 10 நாடுகளை சேர்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்கும் பன்னாட்டு தமிழரங்கமும், 10ம் தேதி மாலை வாசிப்பு என் வாழ்விலும் சினிமாவிலும்' என்ற தலைப்பில் எடிட்டர் பி.லெனின். 'நிமிர்ந்த நன்னடை' என்ற தலைப்பில் நடிகை சுஹாசினி ஆகியோர் பேசுகின்றனர்.
11ம் தேதி மாலை 'நல்ல பொழுதையெல்லாம்' என்ற தலைப்பில் சுகி.சிவம், 12ம் தேதி ஜேம்ஸ் வசந்தனின் இசைக்குழுவினர் சங்க தமிழ் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 13ம் தேதி மாலை 'சங்க இலக்கியச்சாறு' என்ற தலைப்பில் தமிழரு மணியன், 14ம் தேதி மாலை 'திருக்குறள் 100' என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமார் பேசுகிறார். இதில், அவர் இரண்டரை ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட திருக்குறள் ஆராய்ச்சியை தொகுத்து 2.30 மணி நேரம் பேச உள்ளார்.
மேலும் 15ம் தேதி மாலை ஸ்ரீ ராம் சர்மா குழுவினரின் வேலுநாச்சிஎன்ற இசையார்ந்த நடன நாடகம் நடக்கிறது. 16ம் தேதி மாலை நடைபெறும் இறுதி நாள் நிகழ்ச்சியில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதி பேச உள்ளார். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக விற்பனை அரங்குகள் திறக்கப்பட்டிருக்கும்.
புத்தக திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்களும் கலந்து கொள்கின்றன. இதற்காக 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என மக்கள் சிந்தனைப் பேரவை மாநில தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu