ஈரோட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

ஈரோட்டில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு
X

அபராதம் விதிக்கும் அதிகாரிகள்.

ஈரோட்டில் முக கவசம் அணியாமல் வந்த 93 பேருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் மண்டலங்களிலும் 4 உதவி ஆணையாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் ஈரோடு மாநகர் பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 93 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.18 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு ரூ 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் , 18 வயது நிரம்பியவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இன்று காலை கலெக்டர் அலுவலகப் பகுதியில் முக கவசம் அணியாத வர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!