ஈரோடு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 287 மனுக்கள்

ஈரோடு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 287 மனுக்கள்
X

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, காவல் துறை மீது நடவடிக்கை என பல்வேறு குறைபாடுகள், கோரிக்கை தொடர்பாக, 287 மனுக்கள் பெறப்பட்டன.


மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா , சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் குமரன், கலால் உதவி ஆணையர் ஜெயராணி ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil