ஈரோட்டில் 11ம் தேதி தொழிற் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்

ஈரோட்டில்  11ம் தேதி தொழிற் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்
X

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையரகம் (பைல் படம்).

ஈரோட்டில் செப்டம்பர் 11-ம் தேதி தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

ஈரோட்டில் வரும் செப்டம்பர் வரும் 11ம் தேதி தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், ஈரோடு மாவட்ட அளவில் தொழிற் பழகுநர்களுக்கான "பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்" ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற 11ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.

இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்த 2017, 2018, 2019, 2020, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டு அகில இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காதவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு தற்போது தொழிற் பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற் பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும். ஐடிஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் தொழிற் பழகுநர் முகாமில் பங்கேற்று பயன் அடையலாம். கூடுதல், தகவலுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஈரோடு என்ற முகவரி அல்லது 9442494266, 9994110420 என்ற‌ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது