சித்தோடு அருகே இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சித்தோடு அருகே இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்

சித்தோடு அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அடுத்த சித்தோடு கொங்கம்பாளையம் அவுடையன்காடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் நவீன் (21). பெருந்துறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார்.நவீன் குடும்பத்தினர் கேரளாவில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். தேர்வு என்ப தால் நவீன் மட்டும் வீட் டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நவீன் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நவீன் தூக்குபோட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தற் கொலைக்கான காரணம் குறித்து சித்தோடு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி