அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் சாலையை வழிமறித்த ஆண் யானை

அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் சாலையை வழிமறித்த ஆண் யானை
X

தேவர்மலை சாலையில் நடமாடிய ஒற்றை ஆண் யானையை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் சாலையை மறித்த ஒற்றை ஆண் யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் சாலையை மறித்த ஒற்றை ஆண் யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவைகள் கரும்பு லாரிகளை மறித்து கரும்புகளை சுவைப்பதற்காக அடிக்கடி வனப்பகுதியைவிட்டு மலைப்பாதைகளுக்கு வந்து விடுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தநிலையில், நேற்று (16ம் தேதி) காலை சுமார் 7 மணியளவில் பர்கூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று தேவர்மலை சாலைக்கு வந்து நடமாடியது. இதனால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே தங்களுடைய வாகனங்களை நிறுத்திக் கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த ஆம்னி காரில் எதாவது இருக்கின்றனவா? என்று பார்த்தது. எதுவும் இல்லாததால் சாலையோரம் இருந்த கொடிகளை சுவைத்தது. தந்தங்களுடன் பார்க்க கம்பீரமாக இருந்த அந்த ஆண் யானையை வாகன ஓட்டிகள் செல்போனில் படம் பிடித்தனர்.

சுமார் 30 நிமிடம் சாலையிலேயே நடமாடிய யானை பின், தானாக காட்டுக்குள் சென்றது. அதன்பிறகே போக்குவரத்து தொடங்கியது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!