ஈரோடு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்

ஈரோடு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி துவக்கம்
X

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இன்று ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கிருஷ்ணனுண்ணி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர், இதுகுறித்து தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 98 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற 27-02-2023 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 31-01-2023 அன்று தொடங்கி 07-02-2023 அன்று வரை நடைபெறும். 08-02-2023 அன்று பெறப்பட்ட வேட்புமனுக்களின் மீது பரிசீலனை நடைபெறும். 10-02-2023 அன்று வேட்புமனு வாபஸ் நடைபெறும். 27-02-2023 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று பதிவான வாக்குகள் 02-03-2023 அன்று எண்ணப்பட உள்ளன. மேலும், வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் ஆகிய இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் பொறியாளர்கள் மூலம் இன்று (19.01.2023) நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் நடைபெறும் என தெரிவித்தார்.


இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார், வட்டாட்சியர்கள் சிவகாமி (தேர்தல்), பாலசுப்ரமணியம் (ஈரோடு), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture