மின் கட்டண உயர்வு: கோபிசெட்டிபாளையத்தில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு: கோபிசெட்டிபாளையத்தில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், நாளை ஆர்ப்பாட்டம்.

தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) கோபிசெட்டிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி ஆகியவற்றை குறைக்க கோரியும், குடும்ப தலைவிக்கான ரூ.1000 உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த ஆர்ப்பாட்டத்தில், புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் உள்பட கலந்து கொள்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!