ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆக.20) மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்.!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆக.20) மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்.!
X

பைல் படம்

Tomorrow Power Cut - கவுந்தப்பாடி, நசியனூர், கோபி, டி.என்.பாளையம், ஏரங்காட்டூர், நஞ்சைதுறையம்பாளையம், உள்ளூர், செண்பகபுதூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை.

Tomorrow Power Cut -ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) கவுந்தப்பாடி, நசியனூர் மின்பாதை, கோபி மின்பாதை , செண்பகபுதூர், டி.என்.பாளையம், ஏரங்காட்டூர், நஞ்சைதுறையம்பாளையம், உள்ளூர் ஆகிய துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கவுந்தப்பாடி துணை மின் நிலையம்:- கவுந்தப்பாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) சாலை பணிகள் மேற் கொள்ளப்படுகிறது. இதனால் சத்திரோடு, பழனிசாமி கவுண்டர்வீதி, நால்ரோடு, சிறுவலூர்ரோடு, பாரதியார் வீதி, கவுந்தப்பாடி மார்க்கெட், பவானிரோடு, கவுந்தப்பாடி மெயின் ரோடு, அம்மன் கோவில் தோட்டம், வி.ஐ.பி. நகர், தர்மாபுரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நசியனூர் மின்பாதை :- ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் நசியனூர் மின் பாதையில் நெடுஞ்சாலை துறையின் சாலை விஸ்தரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அதனால் சித்தோடு நால்ரோட்டை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

கோபி மின்பாதை :- கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம், கோபி அரசு மருத்துவமனை, குறிஞ்சி, கரட்டடிபாளையம் ஆகிய மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் ல.கள்ளிப்பட்டி, அழகு நகர், தமிழ் நகர், வேலுமணி நகர், ஆசிரியர் காலனி, சக்தி நகர், கச்சேரி மேடு, அமலா ஸ்கூல் ரோடு, கோர்ட் ரோடு, ஜே.எஸ்.நகர், நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், நாகர்பா ளையம் மற்றும் கரட்டடி பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சத்தி செண்பகபுதூர் துணை மின் நிலையம்:- சத்தியமங்கலம் மின்கோட்டம் செண்பகப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், நாளை காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை சத்தியமங்களம். நகர்ப் பகுதியில் உள்ள காந்தி நகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, விஜபி நகர், கெண்பாபுதார். அரசூர் உக்கரம், அரியப்பம்பாளையம் மாக்கினாம்கோம்பை இண்டியம்பாளையம் சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர். அய்யன்சாவை, தாண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

டி.என்.பாளையம், நஞ்சைதுறையம்பாளையம், ஏளூர், ஏரங்காட்டூர் துணை மின் நிலையம்:- கோபி அருகே உள்ள டி.என்.பாளையம், ஏரங்காட்டூர், நஞ்சை துறையம்பாளையம், ஏளூர், ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் வாணிபுத்தூர், துறையம்பாளையம், கொங்கர்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரை கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகர், குட்டையூர், இந்திரா நகர், புஞ்சைதுறையம்பாளையம், உப்புபள்ளம், சுண்டக்கரடு, வலையபாளையம், ஏரங்காட்டூர்,பகவதி நகர், கள்ளியங்காடு, அரக்கன்கோட்டை, மோதூர், வினோபா நகர், சைபன் புதூர், கொளத்துக்காடு, வடக்கு மோதூர், தெற்கு மோதூர், மூல வாய்க்கால், ஏளூர், எம்.ஜி.ஆர். நகர் காலனி, இந்திரா நகர் காலனி, நால்ரோடு சந்தை கடை மற்றும் கொடிவேரி ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai solutions for small business