வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
X

மொடக்குறிச்சி வட்டம் லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாமினை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட கணபதிபாளையம், சாமிநாதபுரம்புதூர், லக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025ன் ஒரு பகுதியாக இன்று (நவ.16) மற்றும் நாளை (நவ.17), மேலும், 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) 4 நாட்கள் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் 2,222 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.


மேற்படி சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

இம்முகாமில் அனைத்து தகுதியான வாக்காளர்களும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற சேவைகளை பெறலாம்.

அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.16) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சாமிநாதபுரம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடைபெற்றதை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சந்திரசேகர், துணை வட்டாட்சியர் (தேர்தல் பணி) லோகேஸ்வரன் உட்பட கிராம நிர்வாக அலுவலர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Similar Posts
ஆப்பக்கூடல் அருகே மயான வசதி கோரி சடலத்துடன் சாலை மறியல் போராட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்: ஈரோடு ஆட்சியர் ஆய்வு
எலுமிச்சை இலையின் ரகசியம்.... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒன்னு போதும் !..
ஈரோட்டில் மாவட்ட திட்டக் குழுக் கூட்டம்
அம்மாபேட்டை, ஒலகடத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரவுண்டானா அமைக்கத் திட்டம்
அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் 108 ஆம்புலன்சில் மலைக் கிராம பெண்ணுக்கு பெண் குழந்தை
கூட்டுறவு வார விழா: ஈரோடு மாவட்டத்தில் 1,193 பேருக்கு ரூ.15.85 கோடியில் கடனுதவி வழங்கிய அமைச்சர்
ஈரோடு மாவட்டத்தில் 1,720  தாய்மார்களுக்கு 2,041 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கல்
பருவாச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம்
பவானியில் வக்கீலை தாக்கிய பேக்கரி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.16) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் ஈரோடு ஆட்சியர் ஆய்வு
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா