ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு
X

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய நிர்வாகிகள் மாநில தலைவர் விக்ரமராஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்டத்தின் சார்பில் நேற்று மற்றும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் விக்ரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனையடுத்து, மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்ட துணைத் தலைவராக ராஜா அருள் சேவியர், மாவட்ட செய்தி தொடர்பாளராக சாதிக் பாட்ஷா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்களாக ரியாஸ் அஹமது, ஞானசேகர், மாநகர இளைஞரணி அமைப்பாளராக பிரேம்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளராக தங்கராஜ், மாநகரப் பொருளாளராக கமலஹாசன், மாநகர துணைத் தலைவராக குழந்தைசாமி என்ற செல்வம், மாநகர துணை செயலாளராக ஸ்ரீரங்கன், பெருந்துறை வட்டாரத் தலைவராக சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் திருமூர்த்தி, மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், மாநகர நிர்வாகிகள், இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!