ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தேர்தல் பொது, காவல், செலவினப் பார்வையாளர்கள் வருகை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தேர்தல் பொது, காவல், செலவினப் பார்வையாளர்கள் வருகை
X

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு ஈரோடு வந்த தேர்தல் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சந்தனா தீப்தியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மலர் கொத்து வழங்கி வரவேற்ற போது எடுத்த படம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் காவல் பார்வையாளர் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், நேற்று இரவு தேர்தல் செலவினப் பார்வையாளர் தினேஷ்குமார் ஜாங்கிட், பொதுப் பார்வையாளர் அஜய்குமார் குப்தா, காவல் பார்வையாளர் சந்தனா தீப்தி ஆகியோர் ஈரோடு வந்தனர். அவர்களுக்கு ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மலர்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என் ஆகியோரும் வரவேற்றனர்.


எனவே, பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறல், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் அளித்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், தேர்தல் பொது பார்வையாளர்- 99445 85473, தேர்தல் காவல் பார்வையாளர்- 99445 86039, தேர்தல் செலவின பார்வையாளர்-96009 68261 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture