சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

சத்தியமங்கலம் அருகே  இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
X

பலியான முதியவர் பழனிசாமி.

புங்கம்பள்ளி அருகே முன்னாள் சென்ற மொபட் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தேசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித்தொழிலாளி. இவர், இன்று மாலை புங்கம்பள்ளியிலிருந்து தேசிபாளையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னர் வந்த இருசக்கர வாகனம் பழனிச்சாமி சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியது‌. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பழனிச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புஞ்சை புளியம்பட்டி போலீசார் பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!