பவானி: அம்மாபேட்டை அருகே கம்பெனி வேன் மீது ராட்சத கிரேன் மோதி விபத்து; 8 பேர் காயம்

பவானி: அம்மாபேட்டை அருகே கம்பெனி வேன் மீது ராட்சத கிரேன் மோதி விபத்து; 8 பேர் காயம்
X

விபத்துக்குள்ளான கம்பெனி வேதனையும், ராட்சத கிரேனையும் படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே கம்பெனி வேன் மீது ராட்சத கிரேன் மோதிய விபத்தில், 8 பேர் காயமடைந்தனர்.

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே கம்பெனி வேன் மீது ராட்சத கிரேன் மோதிய விபத்தில், 8 பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூரில் எஸ்பி அப்பேரல்ஸ் லிமிடெட் என்ற தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து 12 தொழிலாளர்கள், கம்பெனி வேன் ஒன்றில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இந்த வேனை மேட்டூரை சேர்ந்த திருமூர்த்தி (வயது 52) என்பவர் ஓட்டினார். வேன் அந்தியூர்- அம்மாபேட்டை சாலையில் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அம்மாபேட்டை அடுத்த நத்தமேடு பிரிவு அருகே சென்றபோது, கட்டுமான பணி நடந்து வரும் கம்பெனியில் இருந்து வந்த கிரேன் எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.

இந்த விபத்தில், வேனில் வந்த மேட்டூர் மாதையன் குட்டையை சேர்ந்த ரமணி (43), தமிழ்செல்வன் (23), ராதா (33), மேட்டூர் பொன்நகரைச் சேர்ந்த இந்திரா (40), அம்மாபேட்டை அருகே செல்லிக்கவுண்டனூரைச் சேர்ந்த தீபா (29), நெரிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த வசந்தா (44), பூலாம்பட்டியைச் சேர்ந்த வாய்க்கால் மேரி (52), பூதப்பாடியைச் சேர்ந்த மகாலட்சுமி (27) என 8 பேர் காயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று காயம் அடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!