கோபிசெட்டிபாளையம்: நட்சத்திரக் கல் என கூறி நூதன மோசடி- 8 பேர் கைது

நூதன மோசடியில் ஈடுபட்ட முயன்ற 8 பேரை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நஞ்சைபுளியம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் ராக்கிமுத்து மகன் ராஜேந்திரன். கூலித்தொழிலாளி. ராஜேந்திரனிடம் டி.என்.பாளையம் ரங்கம்மாள் வீதியை சேர்ந்த கோபால் மகன் ஆனந்தக்குமார் மற்றும் அந்தியூர் அருகே உள்ள நகலூர் சாமியார் தோட்டத்தை சேர்ந்த சின்னராசு ஆகியோர், தங்களுக்கு தெரிந்தவர்கள் வானத்தில் இருந்து விழுந்த நட்சத்திரக் கல் (சுலைமான் கல்) உள்ளது. அந்த கல்லை வைத்திருந்தால், கத்தியால் குத்தினாலும் இரத்தம் வராது என்றும், அந்த கல்லை வைத்திருந்தால் செல்வம் சேரும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய ராஜேந்திரன், நட்சத்திரக்கல்லை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து, ஆனந்தகுமார் மற்றும் சின்னராசு ஆகியோர் ராஜேந்திரனை டி.என்.பாளையம் வருமாறு கூறியுள்ளனர். பின்னர், ராஜேந்திரனும் அவருடைய நண்பர் செந்தில்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே 8 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். பின்னர், ராஜேந்திரனிடம் நட்சத்திக்கல்லை காட்டிய கும்பம், இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறியுள்ளனர். ராஜேந்திரன் அந்த கல்லை பார்த்தும், மோசடி கும்பல் என தெரியவந்ததையடுத்து அங்கிருந்து திரும்பியுள்ளார்.
ஆனால் அந்த கும்பல் நட்சத்திரக்கல்லை வாங்கிவிட்டால் இரண்டு பேரையும் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். அங்கிருந்து ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர் செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் தப்பித்து, பங்களாப்புதூர் காவல் நிலையத்திற்கு சென்று, இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, போலீசார் அப்பகுதியில் சென்ற போது, 8 பேர் கொண்ட கும்பலை சிறிது தூரத்தில் கைது செய்தனர்.
விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த நாகூராய்யா, பவானியை சேர்ந்த சிவன்மலை , அந்தியூர் புதுமேட்டூரை சேர்ந்த சின்னராசு, சங்ககிரியை சேர்ந்த பழனிச்சாமி, டி.என்.பாளைத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் , நகலூரை சேர்ந்த சின்னராசு, டி.என்.பாளைத்தை சேர்ந்த ஆனந்தக்குமார் ஆகிய 8 பேர் எனவும், இதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகூராய்யா பிரதான புரோக்கராக செயல்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu