சித்தோடு அருகே மின்வாரிய ஊழியர் பலி

சித்தோடு அருகே மின்வாரிய ஊழியர் பலி
X

பைல் படம்.

சித்தோடு அருகே மொபட் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டதில் மின் வாரிய ஊழியர் பலியாகிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). இவர் குமாரபாளையம், எதிர்மேடு வட்டமலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு கோகிலா, யுவஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் சித்தோடு ஈ.பி. நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். முருகேசன் தனது மொபட்டில் தினமும் வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மாலை வேலை முடிந்து பவானி- பெருந்துறை மெயின் ரோடு, சித்தோடு அருகில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் மொபட் மீது மோதி விபத்தானது. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!