அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு பருத்தி ஏலம் 19-ல் தொடக்கம்

அந்தியூர் விற்பனை கூடத்தில் மின்னணு பருத்தி ஏலம் குறித்த அறிக்கை.
அந்தியூர் ஒழுங்கு விற்பனை கூடத்தில் 19ம் தேதி முதல் பருத்தி மின்னணு ஏல விற்பனை நடக்க உள்ளது.
ஈரோடு வேளாண் விற்பனை குழு சார்பில், அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வருகின்ற 19ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பருத்தி மின்னணு ஏல விற்பனை நடக்க உள்ளது. உள்ளூர், வெளியூர், வெளி மாவட்ட வணிகர்கள் பங்கேற்று, பருத்தியை கொள்முதல் செய்ய உள்ளதால், போட்டி மூலம் அதிக விலை கிடைக்கும்.
வணிகர்களால் கொள்முதல் செய்யப்படும் பருத்திக்கு உரிய தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இநாம் மூலம் வரவு வைக்கப்படும்.
மேலும் வெடித்து நன்கு மலர்ந்த பருத்தியை அதிகாலை நேரத்தில் செடியில் இருந்து பறித்து நிழலில் நன்கு உலர்த்தி, அதில் கலந்துள்ள இலை சருகுகள், கொட்டு பருத்தி களை நீக்கி, ரகம் வாரியாக தனித்தனியாக பிரித்து, சாக்குகளில் நிரப்பி ஏல விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்ரி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu