அந்தியூர் சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக சாக்கடையில் வெளியேற்றம்

அந்தியூர் சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக சாக்கடையில் வெளியேற்றம்
X

புகாருக்கு ஆளான சாயப்பட்டறை. 

அந்தியூர் அருகே சாயப்பட்டறை கழிவுகள் நேரடியாக சாக்கடையில் கலந்து விடப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அந்தியூர்-ஆப்பக்கூடல் சாலையில், பூக்கடை பிரிவு பகுதியில், சாயப்பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சாயப்பட்டறையில் இருந்து கழிவுநீர் மற்றும் இரசாயனம் போன்றவை நேரடியாக சாக்கடையில் கலந்து விடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சுற்றுச்சூழல் மாசுஅடைவதாகவும், இது தொடர்பாக, இத்துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!