ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாகன சோதனை: கேரளா வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாகன சோதனை: கேரளா வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த வாகன சோதனையில், கேரளா ஜவுளி வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த வாகன சோதனையில், கேரளா ஜவுளி வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே, அனைத்து பகுதிகளிலும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மனிஷ் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள்.

மேலும், போலீசாருடன், வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து கண்காணிப்பு படைகள். பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, இன்று (ஜன.13) அதிகாலை ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி முஸ்தபா என தெரியவந்தது.

மேலும், அவர் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வாங்க வந்திருப்பதாக கூறினார். எனினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே, அரசு ஒப்பந்ததாரரிடம் ரூ.1 லட்சம் பணமும், லேத் பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.80 லட்சமும், பெண் ஒருவரிடம் ரூ.50,860, பாமக கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் என மொத்தம் இதுவரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
Similar Posts
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு: காவல் நிலையங்களில் சீமான் மீது குவியும் புகார்கள்!
திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு ஆர்டி நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரேடார் 25 நிகழ்ச்சி!
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாகன சோதனை: கேரளா வியாபாரியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்
ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை...!
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!
பா.ம.க. கவுன்சிலரிடம் ரூ.1.22 லட்சம் ரகசிய பறிமுதல்: அதிர்ச்சி தகவல்..!
பவானிசாகர் அணைக்கு 2, 200 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு!
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் : இன்று 2 -வது நாளாக வேட்புமனுத் தாக்கல்
ஜவுளி வியாபாரியிடம் சோதனை..! பறக்கும் படையினர் 1 லட்சம் ரூபாய் பறிமுதல்..!
அந்தியூரில் நள்ளிரவில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது!