பராமரிப்பு பணி: ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

பராமரிப்பு பணி: ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
X

பைல் படம்.

பராமரிப்பு பணிகள் காரணமாக, ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

பராமரிப்பு பணிகள் காரணமாக, ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் வரதநல்லூரில் உள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளது. எனவே 3ம் தேதி (திங்கட்கிழமை) வரை குடிநீர் விநியோக பணிகள் பாதிக்கப்படும்.

பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பராமரிப்பு பணி முடிந்ததும் உடனடியாக சீரான குடிநீர் வினியோகம் தொடங்கும். தற்போது ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story