/* */

பவானி: பணியிட மாற்றம் டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு பிரியாவிடை!

சித்தோடு அருகே நடைபெற்ற டிஎஸ்பி பிரியாவிடை நிகழ்ச்சியில், காவல்துறை சார்பில் டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டப்பட்டது.

HIGHLIGHTS

பவானி: பணியிட மாற்றம் டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு பிரியாவிடை!
X

டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு,  ஆப்பக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சால்வை அணிவித்து புகழாரம் சூட்டிய போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கடந்த ஒன்றை வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிடம் செல்ல உள்ளார்.

இந்நிலையில் பவானி அடுத்துள்ள கங்காபுரம் டெக்ஸ்வேல்யூ வளாகத்தில் காவல்துறை சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஎஸ்பி கார்த்திகேயன் அந்தியூர் முன்னாள் மருத்துவமனை அதிகாரி கவிதா மற்றும் சித்தோடு,அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர்கள் மற்றும் பவானி போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.


தொடர்ந்து அவரது பணி காலத்தில் அவர் செய்த திறம்பட செய்த வழக்கு சார்ந்த நிகழ்வுகள்,பொதுமக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை மற்றும் விவசாயிகளுக்கு கரும்பு தொகை பெற்று தந்த உள்ளிட்ட செயல்கள் சக போலீசார் நினைவு கூர்ந்து டிஎஸ்பி கார்த்திகேயனுக்கு புகழாரம் சூட்டினர்.

தொடர்ந்து காவல்துறையினர் நினைவு பரிசுகளை வழங்கி டிஎஸ்பி கார்த்திகேயனை பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர். முன்னதாக தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், சினிமா பாடல் பாடி, அவரை வழி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Updated On: 26 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க