சத்தியமங்கலம் அருகே போதைப்பொருள் கடத்திய டிரைவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்

சத்தியமங்கலம் அருகே போதைப்பொருள் கடத்திய டிரைவர் கைது: ஒருவர் தப்பி ஓட்டம்
X

கைது செய்யப்பட்ட டிரைவர் செம்புலிங்கம்.

சத்தியமங்கலம் அருகே போதைப்பொருட் களை வேனில் கடந்த முயன்ற இரண்டு டிரைவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடியில் சத்தியமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.‌ அப்போது, அந்த வழியாக வந்த 2 பிக்கப் வேனை போலீசார் சோதனை செய்ததில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. சோதனையில் ஈடுபட்ட போது , பிக்கப் வேனில் வந்த மற்றொரு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

தொடர்ந்து, டிரைவரிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்த செம்புலிங்கம் என்பதும், மற்றோரு டிரைவர் குமாரா என்பதும், 2 பிக்கப் வேனில், 65 மூட்டைகளில் போதைப்பொருள் கோவைக்கு கொண்டு செல்ல முயன்றதும் தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் 2 பிக்கப் வேன் களையும், போதைப்பொருள் கொண்ட 65 மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் செம்புலிங்கம் என்பவரை கைது செய்து , தப்பி ஓடிய மற்றோரு டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!