தமிழக-கர்நாடக மலைப்பாதையில் தலைகீழாக கவிழ்ந்த லாரி
ஆசனூர் அருகே சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த லாரி.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பாதையில் லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
கரூரிலிருந்து லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்வதற்காக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. லாரியை பழைய ஆசனூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (33) என்பவர் ஓட்டிச் சென்றார். ஆசனூர் அருகே அரேப்பாளையம் பிரிவு வனப்பகுதியில் பகுதியில் லாரி சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் லேசான காயத்துடன் டிரைவர் ஜெகதீஸ்வரன் உயிர் தப்பினார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஜெகதீஸ்வரனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்த ஆசனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து ஒரு லாரி பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூர் நோக்கி சென்றது. லாரி தட்டகரை வேலம்பட்டி பிரிவு என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu