கோபி அருகே குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

கோபி அருகே  குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவர் சோமசுந்தரம்

கோபிசெட்டிபாளையம் அருகே தாழைக்கொம்புபுதூரில் குடும்ப தகராறில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் தாழைக்கொம்புபுதூரை சேர்ந்த துரைசாமி மகன் சோமசுந்தரம். கலவை லாரி டிரைவர். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு லயாஸ்ரீ என்ற மகளும், நவநீஸ் என்ற மகனும் உள்ளனர். சோமசுந்தரத்திற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், இவருக்கும் இவரது மனைவி மஞ்சுளாவிற்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சோமசுந்தரம் மனைவி மற்றும் தாயாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இரவில் தூங்க சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!