கோபிச்செட்டிப்பாளையத்தில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

கோபிச்செட்டிப்பாளையத்தில் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே ஜீப் ஓட்டி வந்த டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டதால், எதிரில் வந்த மொபட் மீது மோதியதில் இருவர் படுகாயம்.

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் அதியமான் (வயது 64). மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், இன்று காலை அதியமான் வழக்கம்போல் அலுவலகத்தில் இருந்து மின்வாரிய அதிகாரிகளுடன், ஜீப்பில் கோபியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோபி மொடச்சூர் சாலை, வடுகபாளையம் பிரிவு அருகே வந்தபோது, திடீரென அதியமானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஜீப்புக்குள் மயங்கி விழுந்து இறந்தார்.


இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அந்த வழியாக மொபட்டில் வந்த, வடுகபாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் பானுமதி ஆகியோர் மீது மோதி, சுவரின் மீது மோதி ஜீப் நின்றது. இதில் படுகாயமடைந்த இருவரையும், கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம், குறித்து கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்