கோபிசெட்டிபாளையம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவர் கைது
X

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி.

பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய, டிரைவர் மீது கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

ஈரோடு மாவட்டம் கோபிக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் கணேசமூர்த்தி (28). டிரைவரான கணேசமூர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ள நிலையில், மாணவியிடம் பழகி வந்துள்ளார். மேலும் கடந்த 6 மாத காலமாக மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் சைல்டு லைன் உதவி மையத்திற்கு புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் டிரைவர் கணேச மூர்த்தி 6 மாத காலமாக பாலியல் துன்புறுத்தியது உறுதி செய்ய செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் உடனடியாக அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மேனகா, டிரைவர் கணேச மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future