அந்தியூர் அருகே காரில் சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு: டிரைவர் கைது

அந்தியூர் அருகே காரில் சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு: டிரைவர் கைது
X

கைதான டிரைவர் அலாவூதீன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே காரில் சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவரை கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

அந்தியூர் அருகே காரில் சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவரை கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சமையல் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே சமையல் வேலைக்கு சென்று விட்டு இரவு 11 மணி அளவில் அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.

அப்போது தனது சொந்த ஊரான வெள்ளித்திருப்பூருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். ஆனால் நேரம் கடந்து விட்டதால் பேருந்துகள் இல்லாத காரணத்தினால் தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து வெள்ளித்திருப்பூருக்கு செல்வதற்கு வாகன செய்து வருமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர் அவருக்கு தெரிந்த கார் டிரைவர் அலாவுதீன் என்பவரிடம் பேசி தனது உறவுக்கார பெண்ணை வெள்ளித்திருப்பூர் பகுதியில் கொண்டு சென்று விடுமாறு கூறி அதற்கான வாடகை தொகையை கூகுல் பே மூலம் செலுத்தினர். இதை தொடர்ந்து அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து அலாவுதீன் அந்த பெண்ணை காரில் ஏற்றி கொண்டு வெள்ளித்திருப்பூருக்கு சென்றார்.

கார் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தது. இடையில் அலாவுதீனின் நண்பர் பிரகாஷ் என்பவரும் காரில் ஏறி உடன்செ ன்றுள்ளார். இதை தொடர்ந்து அந்த கார் அந்தியூர் அடுத்த பெரியேரி பகுதியில் சென்ற போது கார் பழுது என கூறி காரை நிறுத்தினர். தொடர்ந்து அலாவுதீன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் அந்த பெண்ணிடம். பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டு சத்தம் போட்டார். இது குறித்து தனது உறவினரிடம் கூறி விடுவேன் என கூறினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் காரில் அழைத்து கொண்டு வெள்ளிதிருப்பூர் அருகே அவரின் வீட்டுக்கு சிறிது தூரக்கு முன்பாகவே இறக்கி விட்டு இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாக பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்து விட்டு அவர்கள் தலைமறை வாகி விட்டனர்.

இதையடுத்து மறு நாள் காலையில் அந்த பெண் இது குறித்து அவரது உறவினருக்கு தெரிவித்தார். இதை தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து கொண்டு அந்தியூர் போலீஸ் நிலையம் சென்றார். இதுகுறித்து அந்த பெண் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் அலாவுதீன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேரும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அலாவூதீன் போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தார். போலீசார் அலாவுதீனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!