இரட்டை இலை எங்களுக்குத்தான்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இரட்டை இலை எங்களுக்குத்தான்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
X

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை யொட்டி அதிமுக பணிமனை அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று காலை ஈரோடு பெருந்துறை ரோட்டில் நடைபெற்றது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்திற்கு திருப்பு முனையாக அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகனின் திடீர் மறைவை ஒட்டி பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு தொகுதியை முதல்வர் ஒதுக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகனின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளர் என நேற்று அறிவித்தது. தேர்தல் பிரச்சாரத்தை திமுக இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் ஈரோடு பெரியார் நகரில் துவக்கினர். தொடர்ந்து, வீரப்பச்சத்திரம் பகுதியில் திமுக பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. ஆனால் அண்ணா திமுக சார்பில் யார் வேட்பாளர் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் பெருந்துறை சாலையில் உள்ள அதிமுக தேர்தல் பணிமனை அமைப்பதற்கான கால்கோள் விழா செங்கோட்டையன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.


பின்னர் செங்கோட்டையன் செய்தியாளரிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்குத் தொகுதி அண்ணா திமுகவின் எகு கோட்டை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் இங்கு அமைதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதன் முன்னோடியாக ஏற்கனவே ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது தேர்தல் பணிமனை அமைப்பதற்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனு பெற்ற பிறகு எடப்பாடியார் வேட்பாளரை அறிவிக்க உள்ளார். மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு அண்ணா திமுகவுக்கே அண்ணா திமுக உறுதியாக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி அண்ணா திமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்.கடந்த 1972 திண்டுக்கல் தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் திருப்பு முனையாக அமையும் என்றார்.


பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணி குழு அமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். அண்ணா திமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள். முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறியிருப்பதற்கும் இரட்டை இலை சின்னம் தனக்குதான், இபிஎஸ் அணியுடன் பேசதயார்" என்று அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள். அண்ணா திமுக எடப்பாடி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும்' என்றார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, இரட்டை இலை எங்களுக்கு தான் என்றார். இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியதற்கு, அவர் மீண்டும் பாஜக பொறுத்திருந்து பாருங்கள் எங்கள் தலைவர் விரைவில் வேட்பாளரை அறிவிப்பார் என்றார்.


திருமகன் ஈவெராவின் மறைவால் காங்கிரஸ் வேட்பாளருக்கு அனுதாப அலை தொகுதியில் தோன்றியுள்ளது. குறித்த கேள்விக்கு ஈரோடு கிழக்கு தொகுதி கிலோமீட்டர் 5 சுற்றளவுக்குள் தான் உள்ளது. இதில் நாங்கள் எடப்பாடி தலைமையில் மிக சிறப்பாக பணியாற்றி வெற்றி வாய்ப்பு பெறுவோம் என்று அவர் கூறினார்.பேட்டியின் போது, எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், பண்ணாரி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!