ஈரோட்டில் பெண்ணின் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டி அகற்றம்!

ஈரோட்டில் பெண்ணின் வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டி அகற்றம்!
X
ஈரோட்டில் பெண்ணின் வயிற்றில் இருந்த 10 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி ஜெம் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்தனர்.

ஈரோட்டில் பெண்ணின் வயிற்றில் இருந்த 10 கிலோ எடையுள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி ஜெம் மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கவிதா (53). இவருக்கு வயிற்று பகுதியில் மிக பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, உடல் எடை வெகுவாக குறைந்து வந்தது. இதனால், ஈரோட்டில் உள்ள தனியார் (ஜெம்) மருத்துவமனையை அணுகினர்.

இங்கு அவருக்கு ரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் பெண்ணின் கருப்பையில் கட்டி 33 x 15x29 சென்டி மீட்டர் 10 கிலோ அளவிலான மிக பெரிய வளர்ந்து இருப்பது தெரிந்தது.

மேலும், இந்த கட்டி வயிற்றின் அடி பகுதியில் இருந்து மேல் நெஞ்சு பகுதி வரை வளர்ந்து உள்ளதாக மருத்துவர் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவருக்கு அதிக ரத்தப் போக்கு இல்லமால் அவரது கருப்பை மற்றும் கட்டியை மருத்துவர் சதீஸ்குமார் மற்றும் செவிலியர் குழுவினரோடு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சுமார் 2.30 மணி நேரத்தில் முற்றிலுமாக நீக்கினர்.

மேலும் , கடந்த 2 ஆண்டுகளில் வளர்ந்த இந்த கட்டி பெரிய அளவு என்பதால் ஓபன் அறுவை சிகிச்சை செய்து 10 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. தற்போது 53 வயது பெண்மணி ஆரோக்கியத்துடன் இருப்பதாக என டாக்டர் சதீஷ் குமார் தெரிவித்தார்.

Next Story
ai solutions for small business