தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது அமைதி காக்க வேண்டும்: அமைச்சர் முத்துசாமி

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது அமைதி காக்க வேண்டும்: அமைச்சர் முத்துசாமி
X

ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும் , தமிழக வீட்டு வசதித்துறை  அமைச்சர் சு.முத்துசாமி.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது அமைதியாகவும் , கட்டுப்பாடுகளுடன் தொண்டர்கள் இருக்க வேண்டும் என்றார்

இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் பொழுது எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பட்டாசு வெடிப்பது. ஊர்வலம் போவது, தட்டி வைப்பது போன்ற எந்த ஆடம்பரமான ஆர்ப்பாட்டங்களும் கண்டிப்பாக இருக்க கூடாது. பட்டாசு வெடிப்பது, பேனர் வைப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். .எனவே எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கட்டுப்பாடாக அமைதி காக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags

Next Story