தலைவர் பதவியை திமுகவும், துணைத் தலைவர் பதவியை அதிமுகவும் கைப்பற்றியது

தலைவர் பதவியை திமுகவும், துணைத் தலைவர் பதவியை அதிமுகவும் கைப்பற்றியது
X

நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி தலைவர் ராகினி

தலைவர் பதவி திமுகவும் துணைத் தலைவர் பதவியை அதிமுகவும் கைப்பற்றி உள்ளது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி 15 வார்டுகளில் திமுக 7 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட ராகினி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் குருசடிரவியும் அதிமுக சார்பில் சந்திரசேகரன் என்பவரும் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் 8 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனால் வெளியே காத்திருந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்து மேளதாளம் முழுங்க கொண்டாடினர். பேரூராட்சி மன்றத் தலைவர் பதவியை திமுகவும் துணைத் தலைவர் பதவியை அதிமுகவும் கைப்பற்றி இருப்பது அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி