அந்தியூரில் மொழிப்போர் தியாகிகள் திருஉருவப்படத்திற்கு திமுகவினர் மரியாதை

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்ட போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களில் சிலர் சிறைக் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து 1965ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி நடைபெற்ற நடந்த பெரும் போராட்டத்தில் பலர் குண்டடிபட்டும், தீக்குளித்தும் தங்கள் உயிரை இழந்தனர். மொழிப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் நாளை மொழிப்போர் தியாகிகள் தினமாக, அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் கடைபிடிக்கின்றன.
தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் தினம், வீரவணக்க நாளாக இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் காந்தி மைதானத்தில் அந்தியூர் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் செபஸ்தியான், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, வார்டு கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu