அந்தியூர், பவானி, கோபி பகுதிகளில், திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பவானி நகர திமுக சார்பில், ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு, மகிழ்ச்சி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
DMK News Tamil -திமுகவின் 15வது பொதுதேர்தலில், 2வது முறையாக திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வை தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையம் அருகே, மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன் தலைமையில், திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நகர திமுக துணைச் செயலாளர் முருகேசன், நகரப்பொருளாளர் மா.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கிளை நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, சுந்தரவடிவேல், ஜீவா, பிரபு, பூபதி, ராஜா, திருமூர்த்தி, செல்லப்பன், கிருஷ்ண குமார், சசிகுமார், ராமச்சந்திரன், செல்லப்பன், மாறன் மாதேஷ், கௌதம், தினேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், பவானி நகர திமுக சார்பில், அந்தியூர் பிரிவில் இனிப்பு வழங்கப்பட்டது. நகர அவைத் தலைவர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். நகர முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் தவமணி, முன்னாள் நகரப் பொருளாளர் செல்வராஜ் இளங்கோ முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பவானி நகராட்சி கவுன்சிலர்கள் மோகன்ராஜ், பாரதிராஜா. சுப்ரமணியம், ரவி, திமுக நிர்வாகிகள் இளங்கோ. ஜெகதீஷ், வெங்கடேஷ், எஸ்.கே.தியாகராஜன், அழகு சிவப்பிரகாசம், குப்புசாமி, அண்ணாஜோதி, ஜக்ருபாய், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே நகர தி.மு.க.சார்பில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களுடைய மகிழ்ச் சியை கொண்டாடினர்.இதில் நகர முன்னாள் தி.மு.க. செயலாளர் மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் ஒன்றிய திமுக சார்பில், அந்தியூர் பேருந்து நிலைய பகுதியில், பேரூராட்சி துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடினர். இதில் ஒன்றிய துணைச் செயலாளர் நாகேஸ்வரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், பேரூர் அவைத்தலைவர் கோவிந்தன், பேரூர் பொருளாளர் சக்தி, ஒன்றிய நெசவாளர் அணி துணை அமைப்பாளர் திரு டி எஸ் சண்முகம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் நகர திமுக சார்பில், வடக்குப்பேட்டை சந்தைக்கடை கார்னரில் முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி தலைமையில் பட்டாசுகள் வெடித்து திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டது. புஞ்சைபுளியம்பட்டி நகர திமுக சார்பில் நகர துணைத் தலைவர் சின் ராஜ் (எ) முருகேசன் தலைமையில், நகர அவை தலைவர் சாகுல் ஹமீது முன்னிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பஸ் நிலையம் முன்பு பட்டாசு கள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடிக்கும் இணைப்பு வழங்கும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத் தலைவர் எஸ்மா ஏ.ஆர்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் எஸ்.பி.முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணுசாமி, ஒன்றிய பொருளாளர் நடேசன், மாவட்ட பிரதிநிதிகள் சந்திரன், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அம்மாபேட்டையில் திமுக கொடி ஏற்றியும், பட்டாசு வெடித்தும் திமுகவினர் வாழ்த்து கோஷம் எழுப்பியதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் பங்க் சுரேஷ், கவுன்சிலர்கள் மோகனேஸ்வரன், கண்ணன், வார்டு செயலாளர்கள் ஏ.பூபதி, கே.பூபதி, குமரவேல், அற்புதராஜ், தனக்கோடி, ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu