பர்கூர் மலைப்பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

பர்கூர் மலைப்பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
X

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை திறந்து வைத்த எம்எல்ஏ வெங்கடாசலம்.

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பது பர்கூர் மலை வாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இதுகுறித்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலத்திடம் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாச்சலத்தின் முயற்சியால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பர்கூர் அடுத்த துருசனாம்பாளையம், தாமரைக்கரை மற்றும் கோயில்நத்தம் ஆகிய இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை திறந்து வைத்த எம்எல்ஏ பால் கொள்முதலை துவக்கி வைத்தார். அப்போது திமுகவினர் மற்றும் மலைவாழ் விவசாயிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!