அந்தியூரில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ

அந்தியூரில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் திமுக எம்எல்ஏ
X

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாச்சலம்.

அந்தியூரில் அனல் பறந்த இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

தமிழ் நாட்டில் நகர்ப்புற தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள 18 வார்டுகளிலும், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம், அந்தியூர் பேரூராட்சி வார்டுகள் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று காலையில் இருந்து மாலை வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மொத்தமுள்ள 18 வார்டுகளிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும், உள்ளாட்சியில் நல்லாட்சி மலரும் எனக் கூறியும் வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தார். இதேபோல் அதிமுக, பாமக உள்ளிட்ட இதர கட்சி வேட்பாளர்களும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வாக்காளர்களிடையே வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!