ஈரோடு மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு திமுக நேர்காணல்

ஈரோடு மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு திமுக நேர்காணல்
X

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில், விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு திமுக நேர்காணலை நடத்தி வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தி.மு.க.வினர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில், விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது.

மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு, மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துச்சாமி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

தொடர்ந்து அறிவித்த அட்டவணைப்படி பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு, மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் தலைமையில் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை , ஒலகடம் , ஜம்பை , அந்தியூர், அத்தாணி, கோபி, ஆப்பக்கூடல், கூகலூர், பி.மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிகளில் மாநில , மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai solutions for small business