அந்தியூரில் திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம்

அந்தியூரில் திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம்
X

அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம். 

அந்தியூர் ஒன்றிய திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் நாளை அந்தியூர்-அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூரில், விரைவில் நடைபெற உள்ள பேரூராட்சி தேர்தல் மற்றும் கழக புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து, அந்தியூர் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு, அந்தியூர் - அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ முன்னிலை வகிக்கிறார்.

மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் மற்றும் ஒன்றிய அவைத்தலைவர் காளிமுத்து ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழகச் செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள், ஊராட்சிக் கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர் என பலர் கலந்து கொள்கிறார்கள்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி