பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்க தி‌முக மாவட்ட கழக செயலாளர் வேண்டுகோள்

பேரறிஞர் அண்ணாவிற்கு மாலை அணிவிக்க தி‌முக மாவட்ட கழக செயலாளர் வேண்டுகோள்
X

ஈரோடு மாவட்ட கழக திமுக செயலாளர் நல்லசிவம் (பைல் படம்)

அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திமுக மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம், தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவுநாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனால், ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக்கழகங்களில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai solutions for small business