திமுக துணை பொதுச்செயலாளர் ராஜினாமா? ஈரோடு மாவட்ட தி.மு.க.,வில் பரபரப்பு

திமுக துணை பொதுச்செயலாளர் ராஜினாமா? ஈரோடு மாவட்ட தி.மு.க.,வில் பரபரப்பு
X

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசனை இல்லத்தில் சந்தித்தார்.

Erode News Tamil -திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Erode News Tamil -திமுக தலைவர் பதவிக்கு அடுத்து, பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் துணை பொதுச் செயலர் பதவிகள் முக்கியமாக உள்ளன. தற்போது துணைப் பொதுச்செயலாளர் பதவியில் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராஜா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் மகளிர் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளராக உள்ள சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சியில் மேலிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கததால், தனது பொறுப்பை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் தரப்பும் மௌனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தற்போது தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சுப்புலட்சுமி ஜெகதீசனை மொடக்குறிச்சியில் உள்ள இல்லத்தில் சந்தித்து இருப்பது ஈரோடு மாவட்ட திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story