ஈரோட்டில் மேலும் ஒரு திமுக வேட்பாளர் மரணம்

ஈரோட்டில்  மேலும் ஒரு திமுக வேட்பாளர் மரணம்
X

மரணமடைந்த திமுக வேட்பாளர் அழகேசன் (எ) சித்து ரெட்டி.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி என்பவர் அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகேசன் என்கின்ற சித்துரெட்டி. விவசாயியான இவர் திமுகவில் 10வருடங்களுக்கு மேல் பொறுப்பு வகித்து வந்துள்ளார். அம்மாபேட்டை பேரூராட்சியில் 2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் இவர், தொடர்ந்து வார்டு பகுதிக்கு உட்பட்ட இடங்களில் கடந்த 10 தினங்களாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

நேற்று இரவு பிரச்சாரம் முடித்து விட்டு வீட்டில் தூக்கி கொண்டிருந்த சித்துரெட்டிக்கு இன்று அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பூதப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். இதன் பின்னர் உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்த திமுக வேட்பாளர் சித்துரெட்டி உடலுக்கு, அப்பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.நேற்று அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் திமுக வேட்பாளர் உயிரிழந்து இருப்பது திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!