ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திமுக தேர்தல் பணிக்குழு அமைப்பு
![Dmk Tamil Nadu | Dmk Election Dmk Tamil Nadu | Dmk Election](https://www.nativenews.in/h-upload/2023/01/24/1647647-dmk-tamil-nadu-dmk-election.webp)
பைல் படம்
Dmk Tamil Nadu- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். நான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிர்ஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
.இத்தொகுதியில் முதன் முதலில் தேர்தல் பிரசாரத்தை துவக்கியும், வேட்பாளரை அறிவித்தும் தேர்தல் பணிகளை சுறுசுறுப்புடன் திமுக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ. சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ், கோவை நா. கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி, க.வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், சேலம் ஆர்.ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், என்.நல்லசிவம், இல.பத்மநாபன், பா.மு. முபாரக், தே.மதியழகன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், எஸ்.எம்.மதுரா செந்தில், பெ.பழனியப்பன், ஒய். பிரகாஷ், திருப்பூர் செல்வ ராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி இவர்களுடன், காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் இணைந்து தேர்தல் பணியாற்றவுள்ளனர். இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது முதலே எந்த கட்சிகள் போட்டியிடும்? யார் வேட்பாளர்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில்ஸ திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல். அதிமுக இரண்டாக பிளவுபட்டு பாஜகவின் பிடியில் சிக்கி இருக்கும் நிலையில் நடைபெறும் தேர்தல். ஆகையால் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu