கோபி வருவாய்க் கோட்டாட்சியராக இளம்பெண் திவ்யபிரியதர்ஷினி பொறுப்பேற்பு

கோபி வருவாய்க் கோட்டாட்சியராக இளம்பெண் திவ்யபிரியதர்ஷினி பொறுப்பேற்பு
X

கோபி கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட செல்வி.திவ்யபிரியதர்ஷினிக்கு கோபி வட்டாட்சியர் ஆசியா வாழ்த்து தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையம் வருவாய்க் கோட்டாட்சியராக செல்வி.திவ்யபிரியதர்ஷினி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய்க் கோட்டாட்சியராக பழனிதேவி பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் பயிற்சி பெற்று வந்த 22 பேருக்கு கோட்டாட்சியராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து கோபி வருவாய்க் கோட்டாட்சியராக செல்வி. திவ்யபிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, செல்வி. திவ்ய பிரியதர்ஷினி கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட செல்வி.திவ்யபிரியதர்ஷினிக்கு கோபி வட்டாட்சியர் ஆசியா, சத்தியமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது